ECONOMYNATIONALPENDIDIKAN

கியூ.எஸ். தரவரிசை- இரு பாடங்களில் யு.பி.எம்.பல்கலைக்கழகம் மலேசிய அளவில் முதலிடம்

செர்டாங், ஏப் 7 – 20220 ஆம் ஆண்டின் பாடங்களுக்கான கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (யு.பி.எம்.) இரண்டு பாடங்களில் நாட்டின் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கால்நடை அறிவியல், வேளாண்மை மற்றும் வனவியல் ஆகிய இரு பாடங்களில் இப்பல்கலைக்கழகம் முதலிடம் வகிப்பதாக அதன் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ முகமது ரோஸ்லான் சுலைமான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கால்நடை மருத்துவத்தைப் பொறுத்தவரை யு.பி.எம். உலகின் 60 வது சிறந்த தரவரிசையில் உள்ளது. இதன் வழி மலேசியாவில் அப்பாடத்திற்கான முதல் இடத்தை இந்த உயர்கல்விக் கூடம் முதன் முறையாகப் பெற்றுள்ளது.  அதேசமயம் விவசாயம் மற்றும் வனத்துறையில் உலகின் 80வது சிறந்த தரவரிசையில் இது உள்ளது. மேலும் 10ஆவது ஆண்டாக நாட்டின் முதல் இடத்தை அது தக்க வைத்து வருகிறது என்று அவர் சொன்னார்.

கால்நடை மருத்துவமனை மற்றும் விலங்கு உடற்கூறியல் அருங்காட்சியகம் ஆகியவை இந்த சாதனைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன  என்று அவர் மேலும் கூறினார்.

கல்விசார் சக மதிப்பாய்வு, பணியமர்த்துபவர்களின் மதிப்பாய்வு, மேற்கோள்கள் மற்றும் எச்-குறியீடு ஆகிய நான்கு வழிகாட்டிகளை இந்த கியூ.எஸ். பாட மதிப்பீட்டு முறை அடிப்படையாகக் கொண்டுள்ளது.


Pengarang :