ECONOMYPBTSELANGOR

பாண்டமாரானில் உள்ள 450 பி40 குடும்பங்கள் ஹரி ராயா ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள்

ஷா ஆலம், ஏப்ரல் 8: பண்டமாரான் சட்டமன்றத்தில் (DUN) வசிப்பவர்களுக்கு RM100 மதிப்புள்ள மொத்தம் 450 ஹரி ராயா ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் டக் சீ, இதுவரை 250 தகுதியான குடியிருப்பாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது அவரது தரப்பு மேலும் 200 பெறுநர்களை அடையாளம் கண்டு வருவதாகவும் கூறினார்.

“சிலாங்கூர் மாநிலப் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம் (கிஸ்) மற்றும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டங்களில் (எஸ்.எம்.யு.இ.) இருந்து உதவி பெறாத குறைந்த வருமானம் கொண்ட குழுவிற்கு (B40) நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சேவை மையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“இந்தப் பற்று சீட்டு திட்டம் ஹரி ராயாவின் தேவைகளை வாங்கும் இந்த உதவி பெறுபவர்களின் சுமையைச் சற்றுக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. பற்றுச் சீட்டுகளை ஜெயண்ட் புக்கிட் திங்கி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களாக மாற்றிக் கொள்ளலாம்,” என்று அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள 33,400 பி40 குடும்பத் தலைவர்கள் பயனடைய ஹரி ராயா ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகிப்பதற்காகச் சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு RM33.4 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நீண்ட கால முயற்சியாக ஏழைகளை இலக்காகக் கொண்டு ஜோம் ஷாப்பிங் ராயா மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிலாங்கூரில் உள்ள எல்லா முக்கியச் சமுகங்களும் அவரவர் சமயப் பண்டிகைகளுக்கு ஏற்ப அவர்கள் பெருநாட்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன.


Pengarang :