ECONOMYHEALTHNATIONAL

மூன்று பேரை கைது செய்ததன் வழி எட்டு கொள்ளை சம்பவங்களுக்கு துப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 9: பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நேற்று இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து செராஸ், அம்பாங் மற்றும் காஜாங் ஆகிய இடங்களில் எட்டு கொள்ளை வழக்குகளுக்கு துப்பு கிடைக்குமென போலீஸார் நம்புகின்றனர்.

செராஸ் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இட்ஸாம் ஜாபர் கூறுகையில், உளவுத்துறையின் அடிப்படையில், செராஸில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் RM149.90 மதிப்பீட்டிலான கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் முதல் சந்தேக நபரை இரவு 8.30 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.

அந்த நபர் கைது செய்யப்பட்டதன் விளைவாக, இரவு 10.30 மணியளவில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததாகவும், கடையில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கத்திகளை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

“21 முதல் 25 வயதுடைய மூவரும் செராஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.

“குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பல கடந்தகால பதிவுகளை வைத்திருக்கும் அனைவரும் இப்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395/397 இன் படி விசாரணைக்காக ஏப்ரல் 13 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றம் தொடர்பான எந்தவொரு தகவலையும் செராஸ் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-9284 5050/5051, கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2115 9999 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திற்கு அனுப்புமாறு பொதுமக்களுக்கு முகமது இட்ஸாம் தெரிவித்தார்.


Pengarang :