ECONOMYSELANGOR

வார இறுதியில் நான்கு இடங்களில் சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனைத் திட்டம்

ஷா ஆலம், ஏப் 13- சிலாங்கூர் அரசின் மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் இவ்வார இறுதியில் நான்கு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருள்களை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரும் சனிக்கிழமையன்று சுங்கை பெசார், டத்தாரான் தொங்காக்கிலும் சிகிஞ்சான் தொகுதி சட்டமன்ற சேவை மையத்தின் முன்புறமும் நடைபெறும்
காஜாங், தாமான் ஜெனாரிஸ் குடியிருப்பாளர் சங்க நடவடிக்கை மையத்திலும் உலு லங்காட், பெக்கான் பத்து 14, காப்ளெக்ஸ் முக்கிம் உலு லங்காட் முன்புறமும் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த மலிவு விற்பனை இயக்கம் நடத்தப்படும்.

இந்த நான்கு இடங்களிலும் மலிவு விற்பனை இயக்கம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்தப்படும்.

பொருள் விலையேற்றத்தினால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு வரும் நோன்பு பெருநாள் வரை மாநிலத்தின் 64 இடங்களில் மலிவு விற்பனை இயக்கத்தை நடத்தி வருகிறது.

இந்த விற்பனை இயக்கத்தில் நடுத்தர கோழி 12.00 வெள்ளி விலையிலும் ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளி விலையிலும் இறைச்சி கிலோ 35.00 வெள்ளி விலையிலும் கெம்போங் மற்றும் செலாயாங் வகை மீன்கள் ஒரு பொட்டலம் 8.00 விலையிலும் விற்கப்படுகின்றன.


Pengarang :