ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இன்று  10,413 தினசரி கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஏப்ரல் 15: நேற்றுப் பதிவான 10,052 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இன்று 10,413 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பு இதுவரை மொத்தம் 4,363,024 சம்பவங்களைக் கொண்டு வந்ததாக சுகாதார தலைமை இயக்குநர் கூறினார்.

“பதிவுசெய்யப்பட்ட மொத்த தினசரி சம்பவங்களில், 10,386 உள்ளூர் சம்பவங்கள் 94.5 விழுக்காடு குடிமக்கள் மற்றும் 5.5 விழுக்காடு குடிமக்கள் அல்லாதவர்கள்.

“நேற்று நிலவரப்படி, 154 சம்பவங்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை தேவைப்படுகிறது, 89 சம்பவங்களுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது” என்று டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டத்தில் 10,361 சம்பவங்கள் அல்லது 99.5 விழுக்காடு என்றும், மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 52 சம்பவங்கள் அல்லது 0.5 விழுக்காடு என்றும் அவர் கூறினார்.

பின்வருபவை நோயாளிகளின் தாக்கங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன:

1 ஆம் கட்டம்: 5,926 சம்பவங்கள் (56.91 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 4,435 சம்பவங்கள் (42.59 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 24 சம்பவங்கள் (0.23 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 11 சம்பவங்கள் (0.11 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 17 சம்பவங்கள் (0.16 விழுக்காடு)

இதற்கிடையில், நேற்று பதிவு செய்யப்பட்ட குணமடைந்த சம்பவங்களின் எண்ணிக்கை 13,202 ஆகவும், மொத்தமாக 4,209,858 சம்பவங்களாகவும் பதிவாகியுள்ளன.


Pengarang :