ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

குழாய் இணைப்புப் பணியால் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், ஏப்ரல் 18: லாங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலை (எல்ஆர்ஏ) திட்டத்திற்கான குழாய் இணைப்பு வேலைக் காரணமாகக் கடந்த வாரம் உலு கிள்ளானில் தாமான் கெராமட்டில் திட்டமிடப்படாத நீர் விநியோகம் தடைபட்டது.

மத்திய அரசு நிறுவனமான பெங்குருசன் அசெட் ஆயர் பெர்ஹாட்டின் (பிஏஏபி) ஒப்பந்தரால் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி நிர்வாகத்தின் கீழ் இல்லை என்றும் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இருப்பினும், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூருக்கு நல்ல நீர் விநியோகத்தை உறுதிசெய்ய இந்தக் குழாய் பொருத்துவது அவசியம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

“இன்று மக்களுக்கு இடையூறு ஏற்படும் காலம் மற்றும் தயார் நிலை பற்றிய தகவல்களை வழங்குமாறு பிஏஏபி மற்றும் ஆயர் சிலாங்கூரைக் கேட்டுக்கொள்கிறேன், இதனால் குடியிருப்பாளர்கள் தயாராக இருப்பார்கள்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஷாஸ்ரில் என்பவர் பேஸ்புக் மூலம் இந்த விசயம் குறித்து எழுப்பிய கேள்விக்கு மேற்கண்ட பதிலைப் பதிவு செய்திருந்தார். இந்தத் திட்டம் உலு லங்காட், செராஸ், சுங்கை பீசி, புக்கிட் ஜாலில், பெட்டாலிங், பண்டார் கின்ராரா, புக்கிட் டிங்கில், அம்பாங் மற்றும் கெரமாட் ஏயூ3 ஆகியவற்றை உள்ளடக்கிய எல்ஆர்ஏ லங்காட் 2 இன் கட்டுமானம் மார்ச் 2014 இல் தொடங்கியது.

பிப்ரவரி மாத நிலவரப்படி, திட்டம் கிட்டத்தட்ட 90 விழுக்காடு முன்னேற்றத்தை எட்டியுள்ளது மற்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க எதிர்பார்க்கப் படுகிறது.

 


Pengarang :