ECONOMYSELANGOR

ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. அமலாக்கத்தைக் கண்காணிக்கும் பணியில் தன்னார்வலர்கள்

கோலாலம்பூர், ஏப் 19– இங்குள்ள கம்போங் பாரு, ஜாலான் ராஜா ஆலாங்கில் தினசரி 3,000 பேர் ரமலான் சந்தைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு எஸ்.ஒ.பி. எனப்படும் சீரான செயலாக்க நடைமுறைகளை கண்காணிக்கும் பணியில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தலைநகரில் பிரசித்தி பெற்ற ரமலான் சந்தையாக விளங்கும் இப்பகுதியில் நோன்பு மாதம் முழுவதும் மாலை 3.00 மணி முதல் தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்டமிக் கட்டத்திற்கு மாறும் நிலையில் நாடு இருந்த போதிலும் எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிக்கும் விஷயத்தில் குறிப்பாக முககவசம் அணிவது மற்றும் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்திருப்பதையும் மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்வதையும் தாங்கள் உறுதி செய்து வருவதாக தன்னார்வலர் பணிக்குழு உறுப்பினரான ரஸிக் ருஸ்யாய்டின ருஸ்லான் கூறினார்.


Pengarang :