ECONOMYHEALTHNATIONAL

நீரிழிவு நோய்க்கு மாற்று மருந்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை- சுகாதார அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர், ஏப் 20– நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படும் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளுக்கு மாற்றாக எந்தவொரு தயாரிப்பை அல்லது உணவை சுகாதார அமைச்சு  ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.

சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தேயிலை தயாரிப்பை தாங்கள் விற்பனை செய்வதாகக் கூறும்  “Myspringshop-US” என்ற பக்கத்தின் நடவடிக்கை தொடர்பில்  இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் மாற்றி அமைக்கப்பட்ட புகைப்படங்களையும் அந்த முகநூல்  பக்கம் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு  தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்தது.

எனவே, உறுதி செய்யப்படாத தகவல் அல்லது அறிக்கையைப் பயன்படுத்தி எந்தவொரு தரப்பினரும் வெளியிடும்  விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.


Pengarang :