MEDIA STATEMENT

முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா காலமானார்

கோலாலம்பூர், ஏப் 21- முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா அயர்லாந்து நாட்டின் டப்ளின் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

அலி ஹம்சாவின் மறைவு குறித்த தகவலை அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி அறிக்கை ஒன்றின் வழி இன்று தெரிவித்தார்.

நாட்டின் பொதுச்சேவைத் துறையைப் பொறுத்த வரை முக்கியமான ஒரு நபராக அலி ஹம்சா விளங்கி வந்தவர் அலி ஹம்சா என முகமது ஜூக்கி வர்ணித்தார்.

கடந்த 1981 ஆம் ஆண்டில் நிர்வாக மற்றும் அரச தந்திரத் துறையில் சேர்ந்த அலி ஹம்சா, பல்வேறு அமைச்சுகள் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றிய காலத்தில் தனது முழு அர்ப்பண உணர்வை வெளிப்படுத்தினார் என்று அவர் குறிப்பிட்டார்.

மறைந்த அலி ஹம்சாவுக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.


Pengarang :