ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 5,899 ஆக குறைந்தது

கோலாலம்பூர், ஏப் 22– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 5,899 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 6,968 ஆக இருந்தது.

நேற்று நோய்த் தொற்று கண்டவர்களில் 99.61 விழுக்காட்டினர் அல்லது 5,876 பேர் லேசான தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்  நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய 23 பேர் அல்லது 0.39 விழுக்காட்டினர் மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைப்  கொண்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அந்த 23 பேரில் 8 பேர் மூன்றாம் கட்டத்திலும் 10 பேர் நான்காம் கட்டத்திலும் 5 பேர் ஐந்தாம் கட்டத்திலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்றிலிருந்து நேற்று 8,434 பேர் குணமடைந்தனர். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.

நேற்று புதிதாக ஒரு நோய்த் தொற்று மையம் அடையாளம் காணப்பட்டதாக கூறிய அவர், அனைத்து மாநிலங்களிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது என்றார்.


Pengarang :