ANTARABANGSAMEDIA STATEMENT

உயிரைக் காக்கும் போராட்டம் தோல்வியில் முடிந்து -நாகேந்திரனுக்கு சிங்கையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர், ஏப் 27- போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நகேந்திரனைக் காப்பாற்ற அவரின் தாயார் மேற்கொண்ட கடைசி நேர முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் அந்த மலேசிய ஆடவருக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இத்தகவலை உறுதிப்படுத்திய நாகேந்திரனின் சகோதரர் நவீன் குமார் (வயது 22), அவரது நல்லுடல் இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான ஈப்போவுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

இந்த மரண தண்டனையின் வழி அனைத்துலக கவனத்தை பெரிதும் ஈர்த்த மற்றும் பொது மன்னிப்பு வழங்கும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோள் செவிசாய்க்கப்படாமல் மரண தண்டனை நிறைவேற்றம் கண்டது.

சிங்கப்பூருக்குள் 44 கிராம் ஹெரோயினைக் கடத்திய குற்றத்திற்காக நாகேந்திரன் தர்மலிங்கம் (வயது 44) கடந்த பத்தாண்டுகளாக மரண தண்டனையை எதிர்நோக்கி வந்தார்.

உலகில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டிருக்கும் நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.


Pengarang :