ECONOMYSELANGOR

மாநில தன்னார்வலர்கள் தீயணைப்பு வீரர்களுடன் பயிற்சி பெறுகின்றனர்

சுங்கை பூலோ, ஏப்ரல் 27: சிலாங்கூர் தன்னார்வத் தொண்டர்களின் (SERVE) மொத்தம் 100 உறுப்பினர்கள், அவர்களின் பேரிடர் மேலாண்மைத் திறனை மேம்படுத்துவதற்காக, தீயணைப்புப் படையில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டனர்.

கடந்த ஆண்டு இறுதியில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் போன்று பொதுமக்களுக்கு உதவுவதற்காக சேவையை விரைவாக வழங்க உறுதி செய்வதே இந்த நடவடிக்கையாகும் என்று இளம் தலைமுறை மற்றும் மனித மூலதனம் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் கைருடின் ஓத்மான் கூறினார்.

“முன்பு, வெள்ளத்திற்குப் பிறகுதான் SERVE உதவியது, தீயணைப்புத் துறையிடம் பயிற்சி பெற்றால், நாங்கள் நிச்சயமாக முன்கூட்டியே உதவ முடியும்.

“எனவே, எங்களின் 4,100 தன்னார்வலர்களில் 100 பேரை SERVE Elit இல் சேர அனுப்பவுள்ளோம். தீயணைப்பு படையினர் உதவ தயாராக உள்ளனர், இந்த திட்டத்தை கூரிய விரைவில் தொடங்க முடியும் என நம்புகிறோம்,” என்றார்.

நேற்றிரவு சௌஜனா உத்தாமா கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) இஃப்தார் பெர்டானா நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

விழாவில், சௌஜனா உத்தாமா தன்னார்வத் தொண்டர் தீயணைப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிக்காக ரிம50,000 பங்களிப்பையும் வழங்கினார்.


Pengarang :