ECONOMYHEALTHNATIONAL

தினசரி நோய்த்தொற்றுகள் 3,000 சம்பவங்களாக உள்ளன

ஷா ஆலம், ஏப்ரல் 28: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 3,361 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 3,471 சம்பவங்களாக சற்று அதிகரித்துள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டங்களில் தீவிரமான சம்பவங்கள் 27 பேர் அல்லது 0.78 விழுக்காடு குறைவாகவே உள்ளன, அதே நேரத்தில் அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டத்தில் 3,444 சம்பவங்கள் அல்லது 99.22 விழுக்காடு உள்ளதாக டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

” மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ள 27 சம்பவங்களில், 13 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும்  பெறவில்லை, 9 பேர் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளன, 5 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள்.

” நேற்று பதிவான மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 44 லட்சத்து 40 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ள வேளையில் 58,436 சம்பவங்கள் இன்னும் செயலில் உள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று மொத்தம் 6,900 பேர் குணமடைந்துள்ளனர், மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 46 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.

கூடுதலாக, இரண்டு புதிய கிளஸ்டர்கள் நேற்று கண்டறியப்பட்டு, நாட்டில் 91 செயலில் உள்ள கிளஸ்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பதிவுசெய்யப்பட்ட கட்டங்களின்படி நோயாளிகளின் விவரம் பின்வருமாறு:

 1 ஆம் கட்டம்: 1,118 சம்பவங்கள் (32.21 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 2,326 சம்பவங்கள் (67.01 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 11 சம்பவங்கள் (0.32 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 8 சம்பவங்கள் (0.23 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 8 சம்பவங்கள் (0.23 விழுக்காடு)


Pengarang :