ANTARABANGSAMEDIA STATEMENT

தட்சணாமூர்த்திக்கு எதிரான மரண தண்டனையை நிறுத்தி வைத்தது சிங்கை நீதிமன்றம்

சிங்கப்பூர், ஏப் 28- மலேசியரான தட்சணாமூர்த்தி காத்தையாவுக்கு எதிரான மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

சிறையில்  முறைகேடாக நடத்தப்பட்டது தொடர்பில் தட்சணாமூர்த்தி தொடுத்துள்ள வழக்கு இம்மாதம் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவ்வழக்கின் முடிவு தெரியும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அவரின் சிங்கப்பூர் வழக்கறிஞர் எம்.ரவி கூறினார்.

தட்சணாமூர்த்தி நாளை வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படவிருந்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு 44.96 கிராம் போதைப் பொருளைக் கடத்திய குற்றத்திற்காக 36 வயதான தட்சணாமூர்த்தி குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நேற்று மற்றொரு மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவருக்கு இங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சணாமூர்த்திக்கு  இம்மாதம் 29 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பான அறிவிப்பை அவரது குடும்பத்தினர் அண்மையில் பெற்றனர்.

தமக்குகெதிரான மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கக் கோரும் மனுவை தட்சணாமூர்த்தி சொந்தமாக தாக்கல் செய்திருந்தார்.


Pengarang :