ECONOMYNATIONAL

பண்டார் காஸ்சியா டோல் சாவடியில் 30 விழுக்காடு கட்டணக் கழிவு- பிளஸ் நிறுவனம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப் 30- நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையின் பண்டார் காஸ்சியா (ஜம்பாத்தான் கெடுவா சென்.பெர்ஹாட்-ஜே.கே.எஸ்.பி.) டோல் சாவடியில் நுழைவோர் மற்றும் வெளியேறுவோர் 30 விழுக்காட்டு கட்டணக் கழிவைப் பெறுவர்.

இந்த கட்டணக் கழிவு தொடர்பான தகவலை பிளஸ் பெர்ஹாட் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.

பண்டார் காஸ்சியா டோல் சாவடியில் நுழையும் பிளஸ் நெடுஞ்சாலை பயனாளிகளுக்கு இலவச டோல் கட்டண சலுகை வழங்கப்படாது. மாறாக, அவர்கள் 30 விழுக்காட்டு கட்டணக் கழிவைப் பெறுவர். கவனமாக வாகனத்தைச் செலுத்துங்கள், பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுங்கள் என அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டணக் கழிவு இன்றிரவு 12.00 மணி தொடங்கி மே 1 தேதி இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும். அதே சமயம் வரும் மே 7 ஆம் தேதி நள்ளிரவு 12.00 முதல் மே 8 இரவு 11.59 மணி வரையிலும் இந்த கட்டணக் கழிவு வழங்கப்படும்.

இந்த கட்டணக் கழிவு அனைத்து வகை வாகனங்களுக்கும் பொருந்தும் என ஜே.கே.எஸ்.பி. நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.


Pengarang :