ECONOMYMEDIA STATEMENTNATIONAL

 நீர் மாசுபாடுக்கு தீர்வு காணப்பட்டு , இன்று இரவு நீர் விநியோகம் மீட்சிப்பெறும்.

ஷா ஆலம், மே 3: துர்நாற்றம் காரணமாக மூடப்பட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (WTPs) இன்று பிற்பகல் 3.30 மணியளவில், மேற்கொள்ளப்பட்ட மூன்று அளவீடுகளின் வழி  மாசுப்பாடு 0 டன்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 472 பகுதிகளில் இன்று இரவு முதல் படிப்படியாக தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் மற்றும் பென்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி ஆகியவற்றின் ஊழியர்கள் மாசுபாட்டின் பிரச்சினையை விரைவாக  தீர்க்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.

“பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் அனுபவிக்கும் விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன், ஏனெனில் இது இந்த வாரத்தில் மூன்றாவது சம்பவம். இருப்பினும், நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.


Pengarang :