ECONOMYNATIONAL

2,600 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஈராண்டு காலத்திற்கு ஒப்பந்தம் நீட்டிப்பு

கோத்தா பாரு, மே 5- கடந்த 2020 ஜூன் மாதம் பணியமர்த்தப்பட்ட 2,600 தற்காலிக ஆசிரியர்களின் பணி ஒப்பந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அவர்களின் ஒப்பந்தம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இவ்விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சும் கல்வி  சேவை ஆணையமும் நடத்தி வரும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தப் பின்னர் இந்த நற்செய்தி தொடர்பான விரிவான விபரங்கள் வெளியிடப்படும் என்று மூத்த கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.

ஒப்பந்த ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த விவகாரங்கள் நடப்பு விதிகள்  மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் உரிய வழிகளில் ஆராயப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

தற்காலிக ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்காது என சிலர் கூறி வருவது தொடர்பில் விளக்கமளிக்க விரும்புகிறேன். அந்த தகவலில்  உண்மையில்லை.

ஆசிரியர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது என்று இங்குள்ள தமது இல்லத்தில் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பை நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ரட்ஸி நேற்று தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பதிவுகள் வாயிலாக கூறியிருந்தார்.

இதனிடையே, ஆசிரியர்கள் முன்கூட்டியே பணி ஓய்வு பெறுவது தொடர்பான விவகாரத்திற்கு தமது அமைச்சு ஒன்றன் பின் ஒன்றாக தீர்வு காணும் என்று ரட்ஸி கூறியிருந்தார்.


Pengarang :