ANTARABANGSAECONOMY

மலேசிய-தாய்லாந்து எல்லையில் மேலும் 3 நுழைவாயில்கள் திறக்கப்பட்டன

கோத்தா பாரு, மே 5- கிளந்தான் மாநிலத்தில் உள்ள மலேசியா-தாய்லாந்து எல்லையில் மேலும் மூன்று குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நுழைவாயில் தொகுதிகள் வர்த்தக மற்றும் சுற்றுலா நோக்கத்திற்காக இன்று முதல் திறக்கப்படுகின்றன.

ரந்தாவ் பாஞ்சாங், புக்கிட் பூங்கா மற்றும் பெங்காலான் குபோர் ஆகியவையே அந்த மூன்று நுழைவாயில்களாகும் என்று கிளந்தான் மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் அஸார் அப்துல் ஹமிட் கூறினார்.

தாய்லாந்து நாட்டிற்கு பயணம் செய்ய விரும்புவோர் இரு நாட்டு அரசுகளும் நிர்ணயித்துள்ள நிலையான நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார்.

அனைத்துப் பயணிகளும் இன்று தொடங்கி இந்த நுழைவாயில்கள் வாயிலாக நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பின்பற்றி பயணம் மேற்கொள்ளலாம் என்றார் அவர்.

தாய்லாந்திலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும், முறையான பயணப் பத்திரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பனப் போன்ற நிபந்தனைகளை சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :