MEDIA STATEMENTNATIONAL

விலைப் பட்டியல் வைக்காத வணிகருக்கு அபராதம்- உள்நாட்டு வாணிக அமைச்சு நடவடிக்கை

ஷா ஆலம், மே 6-  விலைப் பட்டியல் வைக்கத் தவறிய வணிகர் ஒருவருக்கு உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் கோம்பாக் கிளை அபராதம் விதித்துள்ளது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட ஓப்ஸ் பந்தாவ் உச்சவரம்பு விலைத் திட்டத்தின் கீழ் செலாயாங் பாரு ஃபாமா பொது சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  அந்நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பொருள்களுக்கு விலைப்பட்டியல் வைக்கத் தவறும் வணிகர்களுக்கு  எதிராக 2011 ஆம் ஆண்டு கொள்ளை லாபத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

ஆகவே, வணிகர்கள் சட்டத்தை மதித்து செயல்படும் அதேவேளையில் பெருநாள் காலத்தில் பொருள்களின் விலையை உயர்த்துவதையும் தவிர்க்க வேண்டும் என அது வலியுறுத்தியது.

பொருள்களின் விலையை உயர்த்தும் வணிகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Pengarang :