ECONOMYHEALTHNATIONAL

புதிதாக கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் 58 விழுக்காடு குறைந்தது

கோலாலம்பூர், மே 9– இம்மாதம் முதல் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரையிலான 18 வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் புதிய கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 58.3 விழுக்காடு குறைந்துள்ளது.

பதினேழாவது நோய்த் தொற்று வாரத்தில் 20,937 ஆக இருந்த கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 18வது வாரத்தில் 8,732 ஆக குறைந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,876 லிருந்து 8,703 ஆக அதாவது 58.3 விழுக்காடாக குறைந்துள்ளதை இந்த தரவுகள் காட்டுகின்றன. அதே சமயம், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவிய நோய்த் தொற்று எண்ணிக்கையும் 61 லிருந்து 29 ஆக குறைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 56 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், அவற்றில் 23,276 சம்பவங்கள் இன்னும் தீவிர நிலையில் உள்ளன என்றார்.

கடந்த 17 வது நோய்த் தொற்று வாரத்தில் 30,930 ஆக இருந்த நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18 வது வாரத்தில் 42.9 விழுக்காடு உயர்ந்து 56,352 ஆகப் பதிவானது. இதனுடன் சேர்த்து நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 97 ஆயிரத்து 881 ஆக ஆகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 17 வது நோய்த் தொற்று வாரத்தில் 56 ஆக இருந்த இந்நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 வது வாரத்தில் 32 ஆக குறைந்துள்ளது. இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 35,579 ஆக உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :