ECONOMYNATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிய போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், மே 9: முக்கிய நெடுஞ்சாலைகளில், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குக்குச் செல்லும் பல பகுதிகளில் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

வடக்கில், பெண்டாங்கில் இருந்து கெடாவில் உள்ள குருன் ஓய்வு மைய பகுதிக்கு 21 கிலோமீட்டர் தூரமும், சுங்கை பட்டாணி முதல் பினாங்கில் பெர்த்தாம் வரை 18.3 கிலோமீட்டர் தூரம் நெரிசலாக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

” குருன் ஓய்வு மையத்திலிருந்து பெண்டாங்கிற்கு 22 கிலோமீட்டர், பினாங்கில் உள்ள சுங்கை டுவா டோல் பிளாசா முதல் சுங்கை பட்டாணிகெடாவிற்கு 12.4 கிலோமீட்டர் மற்றும் பேராக் கோலா காங்சாரிலிருந்து பினாங்கு புக்கிட் பெராபிட் 4 கிலோமீட்டர் வரை அதிக போக்குவரத்து ஓட்டம் உள்ளது என்று நேற்றிரவு பெர்னாமாவிடம் கூறினார்.

கிழக்கு கடற்கரையில், கோலாலம்பூர்- காரக் நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து, கிழக்கு பெந்தோங்கிலிருந்து பெந்தோங் டோல் பிளாசா 2 கிலோமீட்டர், பெந்தோங் டோல் பிளாசா முதல் புக்கிட் திங்கி 14.7 கிலோமீட்டர், கெந்திங் செம்ப்பாவிலிருந்து சுரங்கப்பாதை 2.6 கிலோமீட்டர் மற்றும் டோல் பிளாசா கோம்பாக்கிற்கு பழைய பாதை 2.7 கிலோமீட்டர் நீளம் போக்குவரத்து நெரிசல்.

தெற்கில் இருந்து வரும் பாதையில் பெடாஸ் லிங்கியிலிருந்து செனவாங் செல்லும் போக்குவரத்தில் 253 ஆவது கிலோமீட்டர் வடக்கில் விபத்து ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.

ஹெந்தியான் கூலாயில் இருந்து 8.9 கிலோமீட்டர் கூலாய் வெளியேறும் வரை தெற்கு நோக்கியும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

வடக்கு-தெற்கு விரைவு நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட இலவச கட்டணம் நேற்றிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது.


Pengarang :