ECONOMYNATIONAL

அதிக முதலீடுகளைப் பதிவு செய்து சிலாங்கூர் சாதனை- 14,393 வேலை வாய்ப்புகள் உருவாக்கம்

ஷா ஆலம், மே 12- நாட்டின் தயாரிப்புத் துறையில் அதிக முதலீட்டு மதிப்பைப் பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்கி வருகிறது.  கடந்தாண்டில் 750 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டைப் பதிவு செய்த தன் மூலம் 24,393 வேலை வாய்ப்புகளை அது உருவாக்கியது.

மொத்தம் 247 முதலீடுகளை ஈர்த்த தன் மூலம் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியிலும் வர்த்தக சூழலுக்கு ஏற்ற இடம் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள்  மத்தியில் இம்மாநிலம் பெற்றுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொருளாதார மந்த நிலை மற்றும் அனைத்துலக எல்லைகள் மூடப்பட்டதால் முதலீட்டு ஊக்குவிப்புப் பயணங்களை வெளிநாடுகளில்  மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஆகிய சவால்களுக்கு மத்தியிலும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தயாரிப்புத் துறையில் கிட்டத்தட்ட 84,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  உயர் மதிப்பு கொண்ட முதலீடுகளை மாநில அரசு எப்போதும் இலக்காக கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

வேலை வாய்ப்புகள் தவிர்த்து நிலைத்தன்மை மற்றும் மாநில அரசின் கொள்கைகள் ஆகியவையும் இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

கடந்தாண்டில் 1,329 வேலை வாய்ப்புகளும் 2017 முதல் 2021 வரை 83,934 வேலை வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டதை சித்தரிக்கும் விளக்கப்படத்தையும் அவர் தனது பேஸ்புக் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Pengarang :