ECONOMY

நெரிசலைத் தவிர்க்க, குடிநுழைவுக் கவுண்டர் செயல்பாடுகள் மூன்று மாதங்களுக்கு இரவு 10 மணி வரை நீட்டிக்கும்

கோலாலம்பூர், மே 12: மலேசிய குடிநுழைவுத் துறை, கவுண்டரின் இயக்க நேரத்தை இன்று முதல், மூன்று மாதங்களுக்கு இரவு 10 மணி வரை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஏப்ரல் 1ல் நாட்டின் எல்லை கதவுகள்  திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பயண கடப்பிதழ் விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கான அதிக தேவை காரணமாக வேலை நேரம் நீடிக்கப்பட்டதாக குடிநுழைவு தலைமை இயக்குநர் டத்தோ கைருல் டிசைமி டாவுட் கூறினார்.

புத்ராஜெயா, கோலாலம்பூர், சிலாங்கூர், ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய ஆறு வளாகங்களின் செயல்பாட்டு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, பினாங்கு, கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு மற்றும் பெர்லிஸ் ஆகியவை அவற்றின் செயல்பாடு நேரத்தை மாலை 6 மணி வரை நீட்டித்துள்ளது.


Pengarang :