ECONOMYHEALTHNATIONAL

கெடாவில் மே 1 முதல் 7 வரை 102 கை,கால்,வாய்ப் புண் நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன 

அலோர்ஸ்டார், மே 12 – கெடாவில் மே 1 முதல் 7 வரை 102 கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மாநில சுகாதாரம் மற்றும் ஊராட்சிக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமது ஹயாத்தி ஓத்மான் தெரிவித்தார்.

கோலா மூடா மாவட்டத்தில் அதிகபட்சமாக 29 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து கோத்தா ஸ்டார் (22) மற்றும் பாடாங் தெராப் (17) எனவும் அவர் கூறினார்.

“இது இந்த ஆண்டு மாநிலத்தில் கை,கால்,வாய்ப் புண் நோய் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கையை 1,016 சம்பவங்களைக் கொண்டு வருகிறது, 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 46.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 26 நோய்த்தொற்று  பதிவாகியுள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக, சிறு குழந்தைகளுடன் இருப்பவர்கள், தொற்று நோய் அபாயத்தைக் குறைக்க, தவறாமல் கைகளை கழுவுதல், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் அசுத்தமான மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்.

“குழந்தைகளை நெரிசலான பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். மேலும், நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருந்தால், குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Pengarang :