ECONOMYNATIONAL

போலி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பீர்- மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் அறிவுறுத்து

கோலாலம்பூர், மே 12- தன்மை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் அதிகாரி எனக் கூறிக் கொண்டு தொலைபேசி வழி மிரட்டல் விடுக்கும் நபருக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி பொது மக்கள் கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளனர்.

தன்னை முகமது அஸிம் அப்துல்  அஜிஸ் எனக்கூறிக் கொண்ட அந்த ஆடவரின் போலி தொலைபேசி அழைப்பு தொடர்பில் நபர் ஒருவரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அறிக்கை ஒன்றின் வழி கூறியது.

சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொண்ட அந்த சந்தேகப் பேர்வழி நெகிரி செம்பிலானிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சூதாட்ட மற்றும் ஆபாச இணைய இணைப்புகளை அனுப்பியதாக குற்றஞ்சாட்டியுள்ளதாக அது தெரிவித்தது.

இந்த குற்றம் தொடர்பில் 30 நிமிடங்களுக்குள் நீங்கள் புகார் செய்ய வேண்டும். தவறினால் உங்கள் தொலைபேசி இணைப்பு முடக்கப்படும் என்பதோடு சேவை வழங்கும் தரப்பினரால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும்  அவ்வாடவர் எச்சரித்துள்ளார் அந்த ஆணையம் மேலும் குறிப்பிட்டது.

முகமது அஸிம் அப்துல் அஜிஸ் என்ற பெயரில் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் யாரும் பணியாற்றவில்லை எனக் கூறிய அந்த ஆணையம், இது போன்ற அழைப்புகளை எளிதில் நம்பிவிடாமல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டது.


Pengarang :