ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

பயிற்சி மருத்துவர்கள் பகடிவதை- விசாரணையை முடிக்க சிறப்பு குழுவுக்கு இரண்டு மாத அவகாசம்

ஷா ஆலம், மே 13- பயற்சி மருத்துவர்களை உட்படுத்திய பகடிவதை தொடர்பான விசாரணையை முடிப்பதற்கு  சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்ட சுயேச்சை குழுவுக்கு  இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் குறித்த விபரங்கள் இன்று மாலை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெவித்தார்.

மருத்துவமனைகளில் வேலை கலாசாரத்தை சரி செய்வதற்கான பரிந்துரைகளையும் முன்வைக்கும்படி அந்த குழுவுக்கு உத்தவிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மருத்துவமனைகளில் நச்சு வேலை கலாசாராம் அமல்படுத்தப்படுவதைக் காண நான் விரும்பவில்லை. முந்தைய சூழல் இப்போது இல்லை. வேலை சூழல் ஒருவரை மற்றவர் மதிக்கும் மற்றும் உதவும் வகையிலும் ஆக்ககரமானதாகவும் இருக்க வேண்டும். கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்துவதோ ஏளனப்படுத்துவதோ கூடாது என அவர் குறிப்பிட்டார்.

செலாயாங் மருத்துவமனைக்கு வருகை புரிந்து பயற்சி மருத்துவர்களின் குறைகளைக் கேட்டறியும் புகைப்படம் ஒன்றையும் கைரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 17 ஆம் தேதி பினாங்கு மருத்துவமனையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் ஜாலான் டத்தோ கிராமாட்டிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


Pengarang :