ECONOMYSELANGOR

கோலா லங்காட்டில் மாநில அளவிலான விசாக தினக் கொண்டாட்டம்

கோலா லங்காட், மே 14: டத்தோ மந்திரி புசார் இன்று இங்குள்ள ஜாலான் சுங்கை புவாயா ஜென்ஜாரோம் உள்ள ஃபோ குவாங் ஷான் டோங் ஜென் சீனக் கோயிலில் மாநில அளவிலான விசாக தின விழாவை தொடக்கிவைத்தார்.

குறிப்பாக புத்த  மதத்தினருடன் விசாக தின கொண்டாட்டத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“சிலாங்கூர் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 10வது விசாக தின கொண்டாட்டத்தில் மாநில அரசின் பங்கேற்புக்கு நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் தனது உரையில் கூறினார்.

மேலும் புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய சர்வமத ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங்

கிம், ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ள விசாக தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் காந்தார கலையை போற்றும் அரங்கம், விசாக தின கச்சேரி, சிசுக்களின் நலம் வேண்டி பிரார்த்தனை, சைவ சமையல் போட்டி, புத்த பாடல்கள் பாடும் போட்டி, சிறுவர்களுக்கான கதை சொல்லும் போட்டி ஆகியவை இடம்பெறும்.

இம்முறை விசாக தின கொண்டாட்டம் ஃபோ குவாங் ஷான் டோங் ஜென் மற்றும் புத்தரின்

ஒளி சர்வதேச சங்கம் மலேசியா (BLIA) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மலேசிய புத்த ஆலோசனைக் குழுவின் (MBCC) முழு ஆதரவையும் கொண்டுள்ளது.


Pengarang :