ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிங்கில் நகரில் ஜோப்கேர்  வேலை வாய்ப்புத் திட்டம் – 108 பேர் பங்கேற்பு

சிப்பாங், 15  மே- டிங்கில், தாமான் கெமிலாங்கில் நேற்ற நடைபெற்ற  ஜோப்கேர்  வேலை வாய்ப்பு சுற்றுப்பயணத்தில் வேலை தேடும் 108 பேர் பங்கு கொண்டனர்.

மொத்தம் 12 பேருக்கு உற்பத்தி மற்றும் தளவாடத் துறைகளில் வேலை கிடைத்ததோடு  மேலும் 46 பேர் இரண்டாவது நேர்காணலில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர் என்று யு.பி.பி.எஸ்.எனப்படும் சிலாங்கூர் தொழிலாளர் ஆக்கத்திறனளிப்பு பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் விஜயன் கூறினார்.

முதல் மூன்று வேலை வாய்ப்பு பயணத் திட்டங்கள் நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரீட்சார்த்த அடிப்படையில் முதன் முறையாக கிராமப்புறத்தில் நடத்தப்பட்ட இத்திட்டத்திற்கு கிடைத்த ஆதரவு  ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தில் பங்கேற்பவர்களில் பெரும்பாலோர் டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டதாரிகளாவர். அவர்கள் வேலையில்லாமல் உள்ளதோடு எதிர்காலத்திற்காக சிறந்த வேலைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பிப்ரவரி 26 முதல் தொடங்கி அடுத்த ஜூன் 25 வரை மாவட்ட அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள 10  வேலை வாய்ப்புத் தொடர் சுற்றுப்பயணங்கள் மூலம் 300 முதல் 400 பங்கேற்பாளர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சென்னார்.

கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் 2.9 சதவீதமாக இருந்த வேலையில்லாத விகிதத்தைக் குறைக்க இந்த வேலை வாய்ப்பு பயணம் உதவும் என தாங்கள் நம்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஜாப்கேர் பயணத் திட்டம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த  15 உள்ளூர் நிறுவனங்களின் பங்கேற்புடன் நடத்தப்படுகிறது. இந்நிறுவனங்கள் வாயிலாக 3,000 வேலை வாய்ப்புகளை வழங்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் https://uppselangor.wixsite.com/my-site என்ற அகப்பக்கம் மூலம் பதிவு செய்யலாம் .

ஜோப்கேர் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான இடம் மற்றும் அடுத்த தேதி பின்வருமாறு-

  • உலு லங்காட் – டெம்ஸ்னே மண்டபம் (மே 21)
  • டேவான் செர்பகுணா ஆயர் பானாஸ், ஸ்தபாபாக் (மே 22 மற்றும் 23)
  • கோம்பாக் – டேவான் தாமான் கோம்பாக் (ஜூன் 4)
  • டேவான் டத்தோ ஹொரமாட் தஞ்சோங் காராங் (ஜூன் 11 மற்றும் 12)
  • கோல லங்காட் – டேவான் பந்திங் பாரு (ஜூன் 18)
  • சபக் பெர்ணம் – டேவான் ஸ்ரீ பெர்ணம் (ஜூன் 25)

Pengarang :