ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஐவரைப் பலி கொண்ட விபத்து- லோரி ஓட்டுநருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிப்பு

ஈப்போ, மே 15- கடந்த புதன் கிழமை வடக்கு-தெற்று நெடுஞ்சாலையின் கோல கங்சார் அருகே ஐவரைப் பலி கொண்ட கோர விபத்தில் சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநருக்கு எதிரான தடுப்புக் காவல் இன்று தொடங்கி மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அந்த 28 வயது லோரி ஓட்டுநர் வரும் புதன்கிழமைவாக்கில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஓமார் பக்தியார் யாக்கோப் கூறினார்.

அந்த லோரி ஓட்டுநருக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அல்லது புதன்கிழமை காலை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அநத் ஓட்டுநர் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 22 குற்றப்பதிவுகளைப் பெற்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவற்றில் வேக வரம்பை மீறியது தொடர்பான ஏழு சம்மன்கள் உள்பட 21 சம்மன்களுக்கு அபராதம் செலுத்தப்பட்டு  விட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த கோர சாலை விபத்தில் சுல்தான் அஸ்லான் ஷா பல்கலைக்கழகத்தின் பயிலும் ஐந்து மாணவர்கள் கருகி மாண்டனர்.


Pengarang :