ECONOMYNATIONAL

பொதுத் தேர்தலை எதிர்கொள்வதில் கட்சியின் ஒற்றுமையே சக்திவாய்ந்த ஆயுதம்- அமிருடின்

ஷா ஆலம், மே 16- அடுத்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையைக் நிலைநாட்டப் பாடுபட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான்  தலைமைத்துவக் மன்றத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.

கெஅடிலான் கட்சியின் பலம் புரிந்துணர்வு  மற்றும் கருத்தொற்றுமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்பதோடு இதுவே வெற்றிக்கு உந்து சக்தியாக விளங்குகிறது என்று மாநில மந்திரி புசாருமான அவர் சொன்னார்.

நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு முன் நமக்கு உள்ள மிகப்பெரிய குறிக்கோள் கட்சியின் உள்ளும்  வெளியிலும் பலத்தை வலுப்படுத்துவதாகும். இதுவே வெற்றியை அடைவதற்கான மிக சக்திவாய்ந்த  வழிமுறையாகும் என்று அவர் தெரிவித்தார்.

மாற்றத்தை விரும்பும் தரப்பினரை ஒன்று சேர்ப்பதன் மூலம் வலிமை பெறமுடியும் என்று அவர் நேற்று டாமான்சாரா டாமாயில் உள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வில் கூறினார்.

நாட்டின் 15 வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் நடைபெறும் காரணத்தால் இந்த கட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கு நன்மைகளைக் கொண்டு வருவதில் கெஅடிலானும் ரிபோர்மாசி எனப்படும்  சீர்திருத்த இயக்கமும் இன்னும் பொருத்தமானவை என்பதை நிரூபிக்க இந்தத் தேர்தல் கிளை மற்றும் தொகுதி நிலையிலான தலைமைத்துவத்திற்கு  ஒரு சோதனைக் களமாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.


Pengarang :