ECONOMYHEALTHNATIONAL

மே மாத நிலவரப்படி 31,661 சம்பவங்கள் பதிவு; நோய்த்தொற்றுகள் 15 மடங்கு அதிகம்

கோலாலம்பூர், மே 17: நாட்டில் கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) சம்பவங்களின் எண்ணிக்கை 31,661 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 15 மடங்கு அபாயகரமான விகிதத்தில் அதிகரித்துள்ளது.

சிலாங்கூர் 8,864 அல்லது 28 விழுக்காடு சம்பவங்களுடன் அதிக எண்ணிக்கையில் கை, கால் மற்றும் வாய் நோய் பதிவாகியுள்ளது, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா – 4,421 சம்பவங்கள் அல்லது 14 விழுக்காடு, சபா – 2,650 சம்பவங்கள் அல்லது 8 விழுக்காடு, பேராக் – 2,638 சம்பவங்கள் அல்லது 8 விழுக்காடு மற்றும் கிளந்தான் – 2,493 சம்பவங்கள் அல்லது 7.9 விழுக்காடு, மற்ற மாநிலங்களில் 1,500க்கும் குறைவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகையில், பெரும்பாலான HFMD சம்பவங்கள் ஆறு வயது மற்றும் அதற்குக் குறைவான சிறார்களிடையே 29,781 சம்பவங்கள் (94 விழுக்காடு), அதைத் தொடர்ந்து 7 முதல் 12 வயது வரையிலான சிறார்கள் 1,473 சம்பவங்கள்.

மைசெஜாத்ரா செயலியின் மூலம் சுகாதார அமைச்சகம் சமீபத்திய தொற்று நோய் கண்டறிதல் அம்சத்தை செயல்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

“இந்த அம்சம் பொதுமக்களுக்கு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பயணங்களை மிகவும் கவனமாகத் திட்டமிடவும் உதவும்” என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.


Pengarang :