SEPANG, 22 Mei — Pendaki Everest yang berjaya mendaki gunung tersebut kali ketiga T. Ravichandran (belakang kanan,empat) bergambar bersama pelajar pelajar Universiti Putra Malaysia (UPM) sejurus tiba di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur hari ini. Beliau merupakan Alumni Universiti Putra Malaysia (UPM). Beliau yang mengulangi sejarah menawan puncak dunia buat kali ketiga mengakui pendakian kali ini berbeza. Ia merupakan pendakian ketiga Ravichandran menawan puncak Everest selepas 2006 serta 2007 dan pada pendakian kedua, beliau pernah berdepan cabaran menghidapi radang dingin di lapan jari tangannya. Beliau memulakan pendakian 2 Mei lalu menuju ke khemah satu, khemah dua serta khemah tiga dan berhenti untuk berehat pada 5 Mei sebelum meneruskan pendakian dari 9 hingga 11 Mei sekali gus tiba di puncak pada 12 Mei. –fotoBERNAMA (2022) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மூன்றாவது முறையாக இமய மலையின் உச்சம் தொட்டு ரவிச்சந்திரன் சாதனை

சிப்பாங், மே 22- மலேசிய மலையேறும் வீரரான டி.ரவிச்சந்திரன் மூன்றாவது முறையாக எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இரு முறை இமயத்தின் உச்சம் தொட்ட 57 வயதான அவர், இம்மாதம் 12 ஆம் தேதி மூன்றாவது முறையாக அச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த மூன்றாவது இமய மலைப் பயணம் ரவிச்சந்திரனுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. கடந்த முறை மேற்கொண்ட பயணத்தைப் போலன்றி இம்முறை அவர் 40 மற்றும் 64 வயதுடைய இரு சகாக்களையும் தம்முடன் அந்த சாகசப் பயணத்தில் இணைத்துக் கொண்டிருந்தார்.

உலகின் மிக உயரிய மலையுச்சிக்கு 40 மற்றும் 64 வயதுடைய இருவரை வெற்றிகரமாக அழைத்துச் சென்றது குறித்து நான் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன் என்று அவர் ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்த மலையேறிகளில் எனது சகாவான அந்த 64 வயது நபரே மிகவும் வயதானவர் என்று சொன்னார்.

எவரெஸ்ட் சாதனையை நிகழ்த்தியப் பின்னர் இன்று தாயகம் திரும்பிய அவர், கோலாலம்பூர் அனைத்துலக விமான  நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனைக் கூறினார்.

தனது சகாக்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக உள்ளதை உறுதி செய்வதும் நிச்சயமற்ற சீதோஷண நிலையும் தமக்கு இப்பயணத்தில் பெரும் சவாலாக விளங்கியதாக ரவிச்சந்திரன் தெரிவித்தார்

கடந்த மே 2 ஆம் தேதி எங்கள் பயணத்தை தொடக்கினோம். முதலாவது முகாம், இரண்டாவது முகாம் மற்றும் மூன்றாவது முகாமை கடந்த கடந்த மே 5 ஆம் தேதி ஓய்வுக்காக பயணத்தை சற்று நிறுத்தினோம். 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பயணத்தை மேற்கொண்ட நாங்கள் மே 12 ஆம் தேதி மலையுச்சியை அடைந்தோம் என்றார் அவர்.

ஒவ்வொரு முறையும் இந்த சாசகப் பயணத்தை மேற்கொள்ளும் போது ஒரு புதுவிதமான சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இந்தப் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் வீசம் குளிர்காற்றில் கைவிரல்கள் விரைத்துப் போகும். பிராணவாயு கலங்களை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

அடுத்தாண்டில் நான்காவது முறையாக எவரெஸ்ட் மலையேறி சாதனை படைக்கவுள்ளதாக மலேசிய புத்ரா பல்லைக்கழக முன்னாள் மாணவரான ரவிச்சந்திரன் கூறினார்.

இம்முறை பிராணவாயு (ஆக்சிஜன்) கலங்கள் இன்றி பயணத்தை மேற்கொள்வற்கு ஏதுவாக உரிய முன்னேற்பாடுகளைச் தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :