ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன நல்லிணக்கத்தை வளர்ப்பதில் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு பேருதவி- பொதுமக்கள் கருத்து

கிள்ளான், மே 22- மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு முஸ்லீம்களை மட்டுமின்றி பிற இனத்தினரையும் ஈரத்தது இந்நிகழ்வுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது.

நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை நேரில் காண்பதற்காக தாயார் மற்றும் சகோத சகோதரிகளுடன் இந்நிகழ்வுக்கு வந்ததாக ஆசிரியையான கோகிலவாணி ராஜ கோபால் (வயது 49) கூறினார்.

பெருநாள் உபசரிப்புகளில் இனம் பேதம் கடந்து அனைவரும் கலந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என கருதுகிறேன். இதன் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் ஒற்றுமையையும் வளர்க்க முடியும் என்று அவர் சொன்னார்.

இது தவிர இதுபோன்ற பெருநாள் காலங்களில் மலாய் சமூகத்தினரின் உணவு வகைகளைச் சுவைத்து பார்ப்பதற்குரிய வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது. லெமாங் மற்றும் ரெண்டாங் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த உணவு இந்த பெருநாள் உபசரிப்பில் இடம் பெற்றுள்ளது என்றார் அவர்.

வார இறுதியில் கிடைத்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி இந்த உபசரிப்பில் கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் தாம் கலந்து கொண்டதாக ஹர்யாத்தி குண்டோர் (வயது 34) கூறினார்.

பெரிய அளவில் நடத்தப்படும் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும். இந்த நிகழ்வில் பல்வேறு விதமான உணவுப் பதார்த்தங்களும் பரிமாறப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளிலும் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்பு தமக்கு கிட்டியதாக ஹோங் கிம் சுவான் (வயது 62) கூறினார்.

மாலையில் பூச்சோங்கில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் கலந்து கொண்டேன். இரவில் கிள்ளான், பண்டமாரானில் நடைபெறும் நிகழ்வுக்கும் வந்துள்ளேன் என்றார் அவர்.


Pengarang :