ECONOMYSELANGOR

ஸ்தாப்பாக்கில் இன்று ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டம்- 3,000 பேர் பயன்பெற வாய்ப்பு

ஷா ஆலம், மே 23- சிலாங்கூர் அரசின் ஜோப்கேர் வேலை வாய்ப்புத் பயணத் திட்டம் இன்று தலைநகர், ஸ்தாப்பாக்கிலுள்ள ஆயர் பானாஸ் சமூக மண்டபத்தில் நடைபெறுகிறது.

சொச்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த திட்டத்தில் சுமார் 3,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வேலை இழந்த குறைந்த, நடுத்தர மற்றும் உயர் தொழில்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் நோக்கில் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்துகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கிள்ளான், டேவான் ஹம்சாவில் தொடங்கிய இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடர் வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி சபாக் பெர்ணம், டேவான் ஸ்ரீ பெர்ணமில் முடிவடைகிறது.

இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் https://uppsselangor.wixsite.com/my-site  எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஜோப்கேர் வேலை வாய்ப்பு திட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் வருமாறு-

-கோம்பாக், டேவான் தாமான் கோம்பாக் (ஜூன் 4)
-டேவான் டத்தோ ஹொர்மாட், தஞ்சோங் காராங் ( ஜூன் 11 மற்றும் 12)
-கோல லங்காட், டேவான் பந்திங் பாரு (ஜூன் 18)
-சபாக் பெர்ணம், டேவான் ஸ்ரீ பெர்ணம் (ஜூன் 25)


Pengarang :