ECONOMYSELANGOR

மாநில ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

கோலாலம்பூர், 23 மே: கடந்த பிப்ரவரியில் மாநில அரசு ஏற்பாடு செய்த ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்ட நேர்காணல் மூலம் 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்தது.

சமூகப் பாதுகாப்பு அமைப்புடன் (சொக்சோ) இணைந்து செயல்படும் இந்தத் திட்டம் இப்போது அதன் ஐந்தாவது தொடரில் நுழைவதாக , தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினரான வீ கணபதிராவ் கூறினார்.

“வெற்றிகரமாக பணிபுரிய ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள், மேலும் வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் அடுத்த மாதம் முதல் இன்னும் நான்கு மாவட்டங்களுக்கு நாங்கள் சுற்றுப்பயணம் செய்வோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

2022ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தை இங்குள்ள செதாபாக், அயர் பனாஸ் பல்நோக்கு மண்டபத்தில் நடத்திய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிப்ரவரி 26 முதல் ஜூன் 25 வரை ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 உள்ளூர் நிறுவனங்கள் இணைந்து சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை வழங்கின.

ஆர்வமுள்ள நபர்கள் https://uppselangor.wixsite.com/my-site என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்.

ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் இடம் மற்றும் தேதி கீழ்வருமாறு:

Dewan Serbaguna Air Panas, Setapak (22 dan 23 Mei)

Gombak – Dewan Taman Gombak (4 Jun)

Dewan Dato’ Hormat Tanjong Karang (11 dan 12 Jun)

Kuala Langat – Dewan Banting Baru (18 Jun)

Sabak Bernam – Dewan Sri Bernam (25 Jun)


Pengarang :