ECONOMYNATIONAL

செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்- இந்தோ. முடிவினால் மலேசியாவுக்கு பாதிப்பில்லை

பெக்கான், மே 24– செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் இந்தோனேசியாவின் முடிவு மலேசிய செம்பனை தொழில் துறைக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் துறை துணையமைச்சர் டத்தோ வில்லி மோங்கின் கூறினார்.

மலேசியாவின் செம்பனை எண்ணெய் உயர் தரத்தைக் கொண்டிருப்பதோடு அந்த மூலப்பொருளை கொள்முதல் செய்ய நமக்கு சொந்தமாக வாடிக்கையாளர்கள் உள்ளதே அதற்கான காரணமாகும் என்று அவர் சொன்னார்.

சிறப்பான விலை, தரமான பொருள் மற்றும் விற்பனை பிந்தைய சேவை ஆகியவை வெளி விவகாரங்களைத் தாண்டி நம்மிடம் பலர் செம்பனை எண்ணெயை வாங்குவதற்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள கிரீன் டெக்னோலோஜி பார்க் தொழில் பூங்காவில் உள்ள நெக்ஸ்கிரீன் குளோபல் பெர்ஹாட் நிறுவனத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :