ECONOMYHEALTHNATIONAL

13 லட்சம் சிறார்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 25: நேற்றைய நிலவரப்படி, நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில் மொத்தம் 11 லட்சத்து 31 ஆயிரத்து 326 பேர் அல்லது 31.9 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 16 லட்சத்து 83 ஆயிரத்து 567 பேர் அல்லது 47.5 விழுக்காட்டினர் தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பிக்கிட்ஸ் மூலம் சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸின் காலக்கெடு  மே 31 ஆகும்.

12 முதல் 17 வயது வரையிலான இளையோரில், மொத்தம் 29 லட்சத்து 10 ஆயிரத்து 553 பேர் அல்லது 93.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 30 லட்சத்து 7 ஆயிரத்து 101 பேர் அல்லது 96.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டில் மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 84 ஆயிரத்து 603 பேர் அல்லது 68.4 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ்களைப் பெற்றுள்ளனர், 2 கோடியே 29 லட்சத்து 73 ஆயிரத்து 173 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 49 ஆயிரத்து 459 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று மொத்தம் 9,883 தினசரி டோஸ்கள், 2,129 பூஸ்டர் ஊசிகள், 3,945 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 3,809 முதல் டோஸ்கள் வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்) கீழ் ஒட்டுமொத்த தடுப்பூசி எண்ணிக்கை 7 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 89 ஆக உயர்ந்துள்ளது.

ஜோகூரில் நேற்று கோவிட்-19 காரணமாக இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்டல் தெரிவித்துள்ளது.


Pengarang :