ECONOMYSELANGOR

கிள்ளானில் ஏழு இந்திய தொழில் முனைவோருக்கு  சிலாங்கூர் மாநில சிறு தொழில் மேம்பாட்டு RM34,000

கிள்ளான் மே 29 ;-கிள்ளான் பகுதியில் உள்ள ஏழு இந்திய தொழில்முனைவோர் ஐ-சீட் என்னும்  சிலாங்கூர் மாநில சிறு தொழில் மேம்பாட்டு திட்டத்தின், தொழில் உபகரண கருவிகள் உதவித் திட்டத்தின் வழி RM34,000க்கு மேல் பெற்றனர்.

கிள்ளான் மாவட்ட ஐ-சீட் செயல்பாட்டு அதிகாரி, மே 10 அன்று பேக்கரி நடத்துனர் ஆர் தனலட்சுமிக்கு RM4,400 மதிப்புள்ள கேக் ஓவன் இயந்திரம் வழங்கப்பட்டது.
“இரண்டாம் உதவி அதே நாளில் கரும்புச்சாறு வியாபாரி ஆர் கணேசனுக்கு வழங்கப்பட்டது, இது RM6,000 மதிப்புள்ள கரும்பு சாறு எடுக்கும் இயந்திரம்.

“இதற்கிடையில், மூன்றாவது தையல் இயந்திரம் RM3,600 மே 11 அன்று தையல்காரர் வி ரகுவிடம் வழங்கப் பட்டது,” என்று எல் கண்மணி பேஸ்புக்கில் தெரிவித்தார்.

நான்காவது பங்களிப்பாக, மே 11 அன்று RM5,100 மதிப்புள்ள அச்சிடும் பணி தொடர்பான மூன்று உபகரணங்களை  பி.கேசம்மா  P Kesamah என்ற அச்சிடும் வர்த்தகர்  பெற்றார்.

மே 12 ஆம் தேதி,   ஏ. யோகேந்திரன் 5,800 ரிங்கிட் மதிப்பிலான அச்சு இயந்திரம் , மே 19 ஆம் தேதி ஒரு வர்த்தகரான எம். அமலோற்பமேரி 4,300 ரிங்கிட் மதிப்பிலான  தையல் இயந்திர பங்களிப்பை பெற்றார்..

“கடைசி உதவியாக மே 20 அன்று சலூன் உரிமையாளர் ஏ கங்கேஸ்வரியிடம் ஒரு கால் ஜக்குஸி ரிங்கிட் 5,000 வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சமூக-பொருளாதார மேம்பாட்டு EXCO, இந்த முயற்சியின் வெற்றிக்காக மொத்தம் RM1 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக கூறினார், இது இடைத்தரகர்கள் அல்லது நிறுவன நியமனங்கள் மூலம் செல்லாமல் நேரடியாக பெறுநர்களுக்கு அனுப்ப படுகிறது.
ஐ-சீட் திட்டத்தில் பங்கேற்க இதுவரை 250க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன என்றார் வீ. கணபதிராவ்.

சமூகத் தலைவர் அல்லது கிராமத் தலைவர் மூலமாக விண்ணப்பங்களைச் செய்யலாம். மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (UPEN) உடனான கூட்டம் தகுதியான விண்ணப்பதாரர்களை மதிப்பீடு செய்து அங்கீகரிக்கும்.


Pengarang :