ECONOMYSELANGOR

இணையம் வழி வழங்கப்படும் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் முதல் காலாண்டில் அதிகரிப்பு

புத்ரா ஜெயா, மே 31- இணையம் வழி வெளியிடப்படும்  வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் காலாண்டில் 159,148 ஆக அதிகரித்துள்ளது.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 90,218 ஆக இருந்ததாக மலேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹிடின் கூறினார்,
இவ்வாண்டின் முதல் காலாண்டைப் பொறுத்த வரை கடந்த பிப்ரவரி மாதம் மிக அதிகமாக அதாவது 67,172 வேலை வாய்ப்பு விளம்பரங்கள் இணையம் வாயிலாக வெளியிடப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

அதே சமயம் ஜனவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் இந்த எண்ணிக்கை முறையே 48,924 மற்றும் 43,052 ஆக இருந்தது என்று இன்று இங்கு வெளியிட்ட “மலேசியாவில் வேலை வாய்ப்பு நிலவரம்“ என்பது மீதான அறிக்கையில் அவர் சொன்னார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் முதலாளிகள்  நிபுணத்துவம் சார்ந்து துறைகளைச் சேர்ந்தவர்களை அதிகம்(44.9 விழுக்காடு) தேடுவதை தரவுகள் காட்டுகின்றன. அதனைத் தொடர்ந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் இணை தொழில்நுட்ப வல்லுநர்கள் (17.7 விழுக்காடு) மற்றும் மேலாளர்கள் (11.3 விழுக்காடு) உள்ளனர் என்றார் அவர்.

நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதற்கேற்ப பொருளாதார நடவடிக்கைகளும் மீட்சி பெற்று வருவதை பிரதிபலிக்கும் விதமாக 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களின் எண்ணிக்கை அமைந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :