ECONOMYSELANGOR

சுங்கை துவா தொகுதியின் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர்

கோம்பாக், ஜூன் 1– சுங்கை துவா தொகுதி ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டனர்.

சுங்கை துவா சதுக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான், உலு கிள்ளான் உறுப்பினர் சஹாரி சுங்கிப், கோம்பாக் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஹிம் காஸ்டி ஆகியோரும் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.

சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அமிருடின், இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களுடன் கலந்துரையாடியதோடு சிறார்களுக்கு நோன்புப் பெருநாள் பண அன்பளிப்பையும் வழங்கினார்.

இந்த பொது உபசரிப்பை மேலும் சிறப்பூட்டும் வகையில் உள்நாட்டு கலைஞர்களின் இசைப்படைப்புகள் அரங்கேற்றப்பட்டதோடு வருகையாளர்களுக்காக பல்வேறு வகையான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக பொது உபசரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் பின்னர் இவ்வாண்டு மாநிலம் முழுவதும் பொது உபசரிப்பு நிகழ்வுகள் கடந்த மாதம் 15 முதல் 21 வரை சிறப்பாக நடத்தப்பட்டன.


Pengarang :