ANTARABANGSAECONOMY

பயணப் பத்திரங்கள் காலாவதியான விவகாரம்- தாய்லாந்து அரசுடன் உள்துறை அமைச்சு பேச்சு

பாசீர் மாஸ், ஜூன் 1- பயணப் பத்திரங்கள் காலாவதியானதால் தாய்லாந்தில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசியர்களின் நிலை குறித்து அந்நாட்டு அரசுடன் உள்துறை அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தங்களுக்கு கிடைத்த தகவலின்படி காலாவதியான பயணப் பத்திரங்களைக் கொண்டிருப்போருக்கு 2,500 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படுவதாக ரந்தாவ் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சித்தி ஜலேஹா முகமது யூசுப் கூறினார்.

அதோ மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மலேசிய பிரஜைகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தாய்லாந்துக்குச் செல்ல மூன்று ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவார்கள் அந்நாட்டுச் சட்டம் கூறுகிறது. இந்த உத்தரவு பொதுமக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும் என அவர் சொன்னார்.

முந்தைய பொது முடக்க காலத்தின் போது காலாவதியான பயணப் பத்திரங்களை மறுபடியும் புதுப்பிக்க முடியாத நிலை தொடர்பில் தாம் பல புகார்களைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்விவகாரத்தை நாங்கள் உள்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து அமைச்சு இது குறித்து தாய்லாந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

தாய்லாந்து அரசாங்கம் ஒப்புதல் அளித்தாலன்றி அபராதம் விதிப்பு மற்றும் கருப்பு பட்டியலிடும் நடைமுறையை அகற்ற முடியாது. ஆகவே, உள்துறை அமைச்சு இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் என நம்புகிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அடிமட்டத் தொழிலாளர்கள் என்பதால் அவர்களுக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம் என்றார் அவர்.


Pengarang :