ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 1,809 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிப்பு- இருவர் மரணம்

ஷா ஆலம், ஜூன் 2– நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று 1,809 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர்.

நேற்று பதிவான சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 8 ஆயிரத்து 48 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

தீவிரமாக உள்ள கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 23,048 லிருந்து நேற்று 23,152 ஆக குறைந்துள்ளதை அந்த அகப்பக்கத்தின் தரவுகள் காட்டுகின்றன.

தீவிர பாதிப்பைக் கொண்ட கோவிட்-19 நோயாளிகளில் 22,052 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 25 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்களிலும் 945 பேர் மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று 2,071 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 47 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களைப் பயன்படுத்தும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 60 விழுக்காடாக உள்ளது.

கோவிட்-19 நோயின் காரணமாக நேற்று இவர் மரணமடைந்தனர். இதன் வழி இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35,678 ஆக உயர்வு கண்டுள்ளது.


Pengarang :