ECONOMYNATIONAL

 2019 ஆம் ஆண்டு முதல், RM9.47 கோடி மதிப்புள்ள போலிப் பொருட்கள் பறிமுதல்

புத்ராஜெயா, ஜூன் 3 – உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) 2019 முதல் கடந்த மே மாதம் வரை 9 கோடியே 47 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 1,160 போலிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

பயனீட்டாளர்கள் மற்றும் வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் புகார்களைத் தொடர்ந்து, வர்த்தக விளக்கங்கள் (திருத்தம்) சட்டம் 2019 இன் கீழ் போலி பொருட்கள் மற்றும் திருட்டுப் பொருட்களின் உற்பத்தியை தடுக்க நாடு முழுவதும் நடத்தப்பட்ட 14,187 சோதனை நடவடிக்கைகளின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் துணை அமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார்.

MyOri SmartSecure செயலி மற்றும் Kepenggunaan Pintar (ஸ்மார்ட் நுகர்வு) திட்டத்தை இன்று அறிமுகப்படுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


Pengarang :