ECONOMYSELANGOR

கிள்ளான் பள்ளத்தாக்கில் எட்டு மாதங்களுக்கு போதுமான தண்ணீர் – லுவாஸ்

ஷா ஆலம், ஜூன் 3 – 2025 ஆம் ஆண்டில் இப்பகுதியில் வறட்சி ஏற்பட்டால், கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் கையிருப்பு எட்டு மாத  விநியோகங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (லுவாஸ்) தெரிவித்துள்ளது.

அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய மூன்று முறைகள் மூலம் வறட்சியின் போது நீர் பெற முடியும் , ஒவ்வொன்றும் இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரைக்குமான  தேவையை நிவர்த்தி  செய்யும்  என்று அதன் இயக்குனர் ஹஸ்ரோல்னிசம் ஷாரி கூறினார்.

மூன்று முறைகளின் அடிப்படையில், ஒரு நாளைக்கு 5,00 கோடி லிட்டரை பெற முடியும் என்று   எதிர்பார்ப்பதாகவும், அதனால் தற்போதைய உற்பத்தி அளவிற்கு சமமான அளவில் நீர்  விநியோகத்தை வழங்க முடியும் என்றார்.

ஜீரோ டிஸ்சார்ஜ் பாலிசி (ZDP) குறித்து ஹஸ்ரோல்னிசம் கூறுகையில், மாநில அரசாங்கத்தின் முன்னோக்கிற்கு உட்பட்டு, ஆகஸ்ட் மாதத்திற்குள் இது செயல்படுத்தப்படும்.


Pengarang :