ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாள் உபசரிப்பில் அரை நிர்வாண நடனம்- விசாரணைக்காக 11 பேர் கைது

கோலாலம்பூர், ஜூன் 4 - நோன்புப் பெருநாள்  திறந்த இல்ல உபசரிப்பில்  திருநங்கைகள் அரை நிர்வாண நடனம் ஆடியது தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் 11 சாட்சிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 அவர்களில் ஆறு பேர் தடுப்புக் காவலில் உள்ள வேளையில்  மேலும் ஐந்து விருந்தினர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது கூறினார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருவதாகவும் அவர் குறிபிட்டார்.

தற்போது, ​​நாங்கள்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தடுத்து வைத்துள்ளதோடு இதில்  சம்பந்தப்பட்ட நடனக் கலைஞர்களையும் அடையாளம் கண்டுள்ளோம். பொது மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள நோக்கத்தை  நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என்றார் அவர்.

நேற்று ,புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற  2022 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் காவல்துறை தலைவர் ஹாக்கி கிண்ண இறுதிப் போட்டியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கடந்த மே 27 ஆம் தேதி ஐ-சிட்டியில் உள்ள வளாகம் ஒன்றில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில்  திருநங்கைகள்  அரை நிர்வாண நடனம் ஆடிய காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Pengarang :