ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரமுகர்களின் பெயர், படங்கள் கொண்ட மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கை தேவை- எம்.சி.எம்.சி. அறிவுரை

கோலாலம்பூர், ஜூன் 4- பெறுநர்களுக்கு வழகத்திற்கு மாறான முறையில் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அரசாங்கம், அமைப்புகள் அல்லது நிறுவனத் தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய மின்னஞ்சல் குறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய மின்னஞ்சல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்திய மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் அந்த மின்னஞ்சலின் நம்பகத் தன்மையை நன்கு சோதிக்கும்படியும் அவர்களைக் கேட்டுக் கொண்டது.

மோசடி நடவடிக்கைளை மேற்கொள்ளும் தரப்பினரின் சூழ்ச்சி வலையில் சிக்காமலிருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் எனக் கூறிய அந்த ஆணையம், இத்தகைய பொய்யான தகவல்களைப் பரப்புவோர் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233 வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 505 வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும் எனவும் எச்சரித்தது.

 


Pengarang :