ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

“சிப்ஸ்“ மாநாட்டு காட்சிக் கூடங்களுக்கான முன்பதிவு ஆகஸ்டு மாதம் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஜூன் 4- சிப்ஸ் 2022 எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வாணிக உச்ச நிலை மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து 850 கண்காட்சிக் கூடங்களும் இரு மாதங்களில் முன்பதிவு செய்யப்பட்டு விடும் என இன்வெஸ்ட் சிலாங்கூர் எதிர்பார்க்கிறது.

ஸ்பார்க் எனப்படும் சிலாங்கூர் தொழிலியல் பூங்கா கண்காட்சிக்கான இடங்களை தயார் படுத்தும் பணி 80 விழுக்காடு பூர்த்தியாகி விட்டதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் கூறினார்.

அதே வேளையில் எஸ்.ஐ.இ. எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக உணவு மற்றும் பான கண்காட்சிக் கூடங்கள் 40 விழுக்காடும் மருத்துவ கண்காட்சிக் கூடங்கள் 35 விழுக்காடும் பூர்த்தியடைந்துள்ளன. இது தவிர சிலாங்கூர் விவேக நகர கண்காட்சி மற்றும் சிலாங்கூர் ஆராய்ச்சி கண்காட்சிக் கூடங்கள் இன்னும் ஆய்வு நிலையில் உள்ளன என்று அவர் சொன்னார்.

உணவு மற்றும் பான கண்காட்சிக்கு மட்டுமே மிக அதிகமாக அதாவது 480 காட்சிக் கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சந்தை விரிவானதாக உள்ளதோடு அதிகமான நாடுகள் இதனையே விரும்புகின்றன என்றார் அவர்.

இன்று இங்குள்ள ரோஸ்யாம் பேரங்காடியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கண்காட்சிக்கு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக இந்தோனேசியா, தைவான், சீனா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து கிடைத்த ஆதரவு மிகவும் வரவேற்கத்தக்க வகையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :