ECONOMYHEALTHSELANGOR

இந்த சனி, ஞாயிறு உலு லங்காட், கோலா லங்காட், கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் இலவச சுகாதாரப் பரிசோதனை

ஷா ஆலம், ஜூன் 8: உலு லங்காட், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்த வார இறுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச சுகாதாரப் பரிசோதனைகள் தொடரும்.

இம்முறை சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் லெம்பா ஜெயா, புக்கிட் அந்தரபாங்சா, சிஜாங்காங், சுங்கை புரோங் மற்றும் பெர்மாதாங் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றம் ஈடுபடுவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

லெம்பா ஜெயா மற்றும் புக்கிட் அந்தரபாங்சா சட்டமன்றத்திற்காக டத்தோ ‘ஸ்ரீ அமிருடின் ஷாரி ட்விட்டர் பகிவிர் படி, ஜூன் 11 ஆம் தேதி பாடாங் தாமான் கோசாஸ் அம்பாங்கில் நடைபெறும்.

இதற்கிடையில், ஜூன் 12 ஆம் தேதி சிஜாங்காங் சட்டமன்றத்தில், டேவான் வாவாசான் கம்போங் மேடானிலும், சுங்கை புரோங் மற்றும் பெர்மாதாங் சட்டமன்றத்தில் கம்போங் ஸ்ரீ தீராம் ஜெயா பொது மண்டபத்திலும் நடைபெறும்.


Pengarang :