ECONOMYSELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகச் சேவை-சனியன்று விஸ்மா மாசாலமில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 9- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகச் சேவை வரும் சனிக்கிழமை இங்குள்ள செக்சன் 9, விஸ்மா மலாசாமில் நடைபெறும்.

அந்த பேரங்காடியின் அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்த இலவச அலுவலகச் சேவை வழங்கப்படும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட அலுவல்களைக் கவனிப்பதற்கு வார நாட்களில் அலுவலகம் வர முடியாதவர்களின் வசதிக்காக இந்த நடமாடும் அலுவலகச் சேவை வழங்கப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மதிப்பீட்டு வரியை சரிபார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத்தை செலுத்துவது, புகார் தெரிவிப்பது, சிறு வணிக லைசென்ஸ் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது உள்ளிட்ட சேவைகளை இங்கு பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வட்டார மக்களுக்கு மாநகர் மன்றம் வழங்கும் சேவையை மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ள இந்த நடமாடும் அலுவலகச் சேவை துணை புரியும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ஷாரின் சொன்னார்.


Pengarang :