ECONOMYHEALTHNATIONAL

பொது மக்கள் பீதியில் அதிகமாக வாங்குவது மருந்து பற்றாக்குறைக்கு காரணமா? சுகாதார அமைச்சு மறுப்பு

அலோர் ஸ்டார், ஜூன் 9- மருந்தகங்களிலும் தனியார் மருத்துவ மையங்களிலும் மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதற்கு பொது மக்கள் பீதியில் அதிக மருந்துகளை வாங்கிக் குவிப்பது காரணம் அல்ல என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.

மாறாக, இதற்கு முன்னர் ஒமிக்ரோன் வகை கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட்டது மற்றும் கை,கால்,வாய்ப்புண் நோய் தற்போது பரவி வருவது ஆகியவற்றால் மருந்துகளுக்கான தேவை அதிகரித்ததே இந்த பற்றாக்குறைக்கு காரணம் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

எனினும், எல்லா இடங்களிலும் எல்லா மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்படவில்லை. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இப்பிரச்னை நிலவுகிறது. பொதுவில் நாடு முழுவதும் மருந்துகளின் விநியோகம் போதுமான அளவு உள்ளது என்று உறுதியளிக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

சில மருந்துகள் சந்தையில் குறைவாக உள்ளதே தவிர, அறவே இல்லாமலில்லை. குறிப்பாக ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கான மருந்துகள் போதுமான அளவு இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

ஏற்கனவே பலர் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டதும் அதன் பின்னர் தற்போது கை,கால்,வாய்ப்புண் நோயினால் பீடிக்கப்படுவதும் மருந்து பற்றாக்குறைப் பிரச்னையுடன் தொடர்பிருக்கும் சாத்தியம் உள்ளது. இத்தைகைய சூழலில் மருந்துகளை அதிகமாக வாங்குவதும் அதனால் பற்றாக்குறை ஏற்படுவதும் சகஜமே என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :